பாகிஸ்தான் தேசிய தின விழாவினை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Home

shadow

                 பாகிஸ்தான் தேசிய தின விழாவிற்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அந்த விழாவினை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானின் தேசிய தின கொண்டாட்டம் டெல்லியில் உள்ள அந்நாட்டின் உயர் ஆணையத்தில் நடைபெற உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியாபாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்து வரும் நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விழாவை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தேசிய தின விழாவிற்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அந்த விழாவினை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் யாரையும் அனுப்ப போவதில்லை என அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :