பிரதமருக்கு அதிகாரிகள் கடிதம்

Home

shadow


மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறி விட்டதாக ஓய்வு  பெற்ற உயர் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காஷ்மீரின் கதுவா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் உனாவில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனஇந்த நிலையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் 49 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதசார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை சரிவடைந்துள்ளதாகவும்,  8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மனிதம் மரித்துப் போய் விட்டதைக் காட்டுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்சுதந்திரத்திற்கு பிறகு இது இருள் சூழ்ந்த நேரம் என்றும் நடைபெற்ற சம்பவங்களுக்கு அரசும், அரசியல் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் நிலக்கரித் துறை முன்னாள் செயலர் சந்திரசேகர் பாலகிருஷ்ணன், முன்னாள் டி.ஜி.பி.க்கள் மீரா போர்வங்கர், ஜுலியே ரிபைரோ, முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் நரேஷ்வர் தயாள், இத்தாலிக்கான இந்திய முன்னாள் தூதர் கே.பி. பேஃபியன், சுகாதாரத் துறை முன்னாள் செயலர் சுஜாதா ராவ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :