பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வாழ்த்து

Home

shadow

                  

                 மீண்டும் அரியாசனத்தில் பாரதத் தாயின் தவப்புதல்வன்
                 பிரதமர் நரேந்திர மோடிக்கு
                 இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர்
                 டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வாழ்த்து

                 அரியாசனத்தில் மீண்டும் அமரவுள்ள பாரத தாயின் தவப் புதல்வன் நரேந்திர மோடியினை வாழ்த்துவதாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.  
    
               17வது மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 542 தொகுதிகளில், ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் பதவியேற்கவுள்ளார். 
இது குறித்து தலைவர் டாக்டர் தி.தேவநாதன்யாதவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்.,
            
           மக்களவை தேர்தலில் உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள இந்த இமாலய வெற்றிக்காக மனமார வாழ்த்துகிறேன்.  ஏழை எளிய சாமனியனாக கட்சியில் இணைந்து பணியாற்றி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று, இரண்டாவது முறையாக  இந்தியப் பிரதமராக பணியாற்றவுள்ளீர்கள் என்பது எல்லோராலும் செய்துவிட முடியாத வியத்தகு சாதனையாகும். 
      
             இந்தியர்கள் தொழில் செய்வதை எளிதாக்க “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டம், உலக அரங்கில் இந்திய தேசம் உன்னத நிலை அடைவதற்காக  “தூய்மையான இந்தியா” திட்டம், அனைவருக்கும் இட ஒதுக்கீடு என்ற நிலையை உருவாக்க பொருளாதாரத்திலும் கல்வியிலும் பொதுப்பிரிவினர் முன்னேற 10 சதவீத இட ஒதுக்கீடு, இந்திய பொருளாதாரத்தினை நிலையான, நீண்ட கால வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல ஒருங்கிணைந்த வரிவசூலிப்பு திட்டம்(ஜி.எஸ்.டி), கருப்புப் பணத்திற்கு எதிராக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் திட்டம்,  எல்லோருக்கும் இலவச கேஸ் வழங்கும் உஜ்வாலா திட்டம், ஏழை மக்களுக்கும் வங்கிச் சேவைகளை வழங்க ஜன்தன் திட்டம், இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க பிணை ஏதுமின்றி  கடன் வழங்க முத்ரா திட்டம், கொடிய நோய்களிலிருந்து மக்களை காக்க  `பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டம் - ஆயுஷ்மான் பாரத் திட்டம் என தங்களின் முந்தைய பொற்கால ஆட்சித் திட்டங்களை தற்போதைய தங்களின் ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தி பாரத தேசம் பண்பட்ட தேசமாக உலக அரங்கில் பீடு நடைபோட வேண்டும்.  தங்களின் மனிதநேயம், தைரியம், அன்பு, பொறுமை, அர்ப்பணிப்பு ஆகியவை  இந்தியாவை புதிய யுகத்திற்கு கொண்டு செல்லட்டும், தங்கள் தலைமையில் புதிய இந்தியாவினை உருவாக்கி, உலகிற்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக செயல்படவேண்டும். உங்களது அனைத்து செயல்களும் வெற்றிகரமாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :