புதிய கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

Home

shadow

                                                                  இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பாவின் பதவிக்காலம் மே 31-ஆம்தேதியோடுநிறைவடைகிறது.இந்நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் கிழக்குப்பகுதி தளபதியாக பொறுப்புவகிக்கும் கரம்பிர் சிங் முன்னர் ஐ.எம்.எஸ்.டெல்லி, ஐ.எம்.எஸ்.ரானா கடற்படை தளங்களின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.  38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம் விஷிட் சேவா உள்ளிட்ட சிறப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :