பெடரேஷன் கோப்பை கைப்பந்து

Home

shadow


ஆந்திர மாநிலத்தில் உள்ள பீமாவரத்தில், நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பைக்கான 31வது தேசிய கைப்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம், வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில், பெடரேஷன் கோப்பைக்கான 31வது தேசிய கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக அணியை 3க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரிவில் இன்று நடைபெறவுள்ள  ஆட்டத்தில், தமிழ்நாடு அணியும் ஆந்திர அணியும் மோதுகின்றன. நாளை, தமிழக ஆடவர் அணி, கேரள அணியை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :