பெரம்பலூர் - மான் உயிரிழப்பு

Home

shadow

         பெரம்பலூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற மான் ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

சிறுவாச்சூர், பாடாலூர், வெண்பாவூர், ரஞ்சன்குடி, செம்மலை பூலாம்பாடி, சின்னாறு, சித்தளி உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மான், மயில் காட்டுப்பன்றி,முயல்,நரி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேடி சாலையை கடக்க முயன்றார் மூன்று வயது மதிக்கத்தக்க கிளை மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :