பொது சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வின் நியூஸ் தொலைக்காட்சிக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது

Home

shadow

பொது சுகாதாரம் குறித்து ஊடகத்துறை வழியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக நமது வின் நியூஸ் தொலைக்காட்சிக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.


ஐயா ஆபிசர் ஐயா நேரலை நிகழ்ச்சி மூலமாகவும், வின்கள ஆய்வு போன்றவற்றின் மூலம் பொது சுகாதாரம் குறித்து நமது வின் நியூஸ் தொலைக்காட்சி பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. மேலும் பொது சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளை மக்களுடன் இணைந்து அரசின் பார்வைக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வும் கண்டு வருகிறது. இந்நிலையில், பொது சுகாதாரம் குறித்து ஊடகத்துறை வழியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக நமது வின் நியூஸ் தொலைக்காட்சிக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுகாதார கூட்டமைப்பு மற்றும்  இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சுகாதார விழிப்புணர்வு விருது வழங்கும் விழாவில் நமது வின் தொலைகாட்சிக்கு இன்று சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :