பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மற்றும் திருப்பூரில் வழக்கறிஞர்கள் போராட்டம்

Home

shadow

                                                                  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மற்றும் திருப்பூரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் உள்ள 18 நீதிமன்றங்களிலும் எந்த பணியும் நடைபெறவில்லை.
இதேபோல் பெரம்பலூரிலும் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்திலும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருப்பூரில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட் வீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  எஸ்.பி. பாண்டியராஜனை உடனடி பணி நீக்கம் செய்ய   வேண்டும், குற்றவாளிக்கு கம்பி சிறையும், கயிறும் போதாது தோட்டா தான் தீர்வு என பதாதைகள் கைகளில் ஏந்தி  300 -க்கும் மேற்பட்ட  வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :