மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

Home

shadow

மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தொகுதி பட்டியலை வெளியிட்டாலும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் காங்கிரஸ் தனது  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுஅதில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில்  சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சிவகங்கை தொகுதியில்பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய செயலாளர் எச் ராஜா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :