மக்களவை வளாகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Home

shadow

                மக்களவை வளாகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

               கர்நாடகாவில் காங்கிரஸ் மஜக கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருவதாகக் கூறி, மக்களவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஆளும் பாஜக அரசில் இணைந்தனர்.


பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே, கர்நாடகா மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சியை அழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக கூறி, காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் மக்களவை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராகுல் காந்தி, மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், “ஜனநாயகத்தை காப்பாற்று” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இது தொடர்பான செய்திகள் :