மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியலைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் வெளியிட்டார்

Home

shadow

மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிமுக விழா மற்றும் மாற்றத்தின் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது. இதில் 19 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் ஆனந்தமலை எம்.தங்கராஜ், திருவண்ணாமலையில் ஆர்.அருள், ஆரணியில் வி.ஷாஜி, கள்ளக்குறிச்சியில் ஹெச்.கணேஷ், நாமக்கல்லில் ஆர்.தங்கராஜ், ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இதேபோல்  ஈரோட்டில் ஏ.சரவணகுமார், ராமநாதபுரத்தில் ஜெ.விஜயபாஸ்கர், கரூரில் மருத்துவர் ஹரிஹரன், பெரம்பலூரில் வி.அருள்பிரகாசம், தஞ்சாவூரில் ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ், ஆகியோரும் சிவகங்கையில் கவிஞர் சினேகன், மதுரையில் எம்.அழகர், தென் சென்னையில் ஆர்.ரங்கராஜன், கடலூரில் வி.அண்ணாமலை, ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

விருதுநகரில் வி.முனியசாமி, தென்காசியில் கே.முனீஸ்வரன், திருப்பூரில் வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சியில் மூகாம்பிகை ரத்தினம், கோவையில் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

ஏற்கெனவே முதல்கட்டமாக, 21 மக்களவைத்  தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியுடும் வேட்பாளர்கள் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்

பூந்தமல்லி பேரவைத் தொகுதியில் பூவை ஜெகதீஷ், பெரம்பூர் தொகுதியில் யு.பிரியதர்ஷினி, திருப்போரூர் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் கருணாகரன், சோளிங்கரில் இந்திய குடியரசுக் கட்சியின் கே.எஸ்.மலைராஜன், குடியாத்தத்தில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் பி.வெங்கடேசன்ஆகியோர் போட்டியடவுள்ளனர்.

இதேபோல் ஆம்பூரில் நந்தகோபால், ஓசூரில் பி.ஜெயபால், பாப்பிரெட்டிபட்டியில் நல்லாத்தம், அரூர் தொகுதியில் குப்புசாமி, நிலக்கோட்டையில் சின்னதுரை, திருவாரூரில் கே.அருண் சிதம்பரம், ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதிமையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மேலும்

தஞ்சாவூரில் துரை அரசன், மானாமதுரையில் எம்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டியில் வளரும் தமிழகம் கட்சியின் தங்கவேல், பெரியகுளம் தொகுதியில் பிரபு, சாத்தூரில் தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுந்தரராஜ், ஆகியோரும்  பரமக்குடியில் கே.உக்கிரபாண்டியன், விளாத்திகுளம் தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நடராஜ் ஆகியோர் போட்டுயிடவுள்ளனர்இதில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றில் எந்தத் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை.  

இது தொடர்பான செய்திகள் :