மதுராந்தகம் புறவழிச்சாலையில் லாரியை பழுது - இரு ஓட்டுநர்கள் உயிரிழப்பு

Home

shadow


        மதுராந்தகம் புறவழிச்சாலையில் லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநர்கள் மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளாதில், இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழிச்சாலையில், சென்னை நோக்கி வந்த சத்தீஸ்கர் மாநில கண்டெய்னர் லாரி பழுதாகியதால் சாலையோரம் நிறுத்திவைத்து, அந்த லாரியின் ஓட்டுநரும், கிளீனரும் பழுது பார்த்துள்ளனர். இதேபோல் கண்டெய்னர் லாரியுடன் வந்த சத்தீஸ்கர் மாநில ஓட்டுநர் மித்ரா சிங், அவரது லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அவர்களுக்கு பழுது நீக்க உதவியுள்ளார். அப்போது அதிவேகமாக சென்னை நோக்கி வந்த லாரி இவர்கள் மீது மோதி விபத்து நேரிட்டது. இதில், ஓட்டுநர்கள் அரவிந்தர் சிங், மித்ரா சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கிளீனர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :