மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் - தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு

Home

shadow

                 மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் ஏப்ரல் 18 ஆம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால் வாக்குப்பதிவில் வாக்குகள் குறைய வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சிகள் தெரிவித்தன. மேலும் இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.சித்திரை திருவிழா குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் மதுரையில் மட்டும் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சித்திரை திருவிழாவை முன்னிட்டி மதுரை தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற தொகுதிகளில் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவித்தார்.  

இது தொடர்பான செய்திகள் :