மலேசியாவில் உயிரிழந்தவர் உடல் 7 நாட்கள் ஆகியும் சொந்த ஊரான அரியலூருக்கு வராததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

Home

shadow

                                             மலேசியாவுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்ததாக தகவல் அளித்த நிலையில், அவரது உடல் 7 நாட்கள் ஆகியும் சொந்த ஊரான அரியலூருக்கு வராததால், அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் பூதுர் கிராமத்தைச் சேர்ந்த கார்னியா என்ற பெண்ணிற்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொத்தனாரான சுதாகர், கடந்த 2018ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு பணிக்கு சென்றார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மலேசியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு விடுதிக்கு சென்றதாகவும், அவர் தங்கியிருந்த விடுதியில் அவருக்கு மாரடைப்பு வந்து உயிரிழந்துவிட்டதாகவும் அவரது மனைவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கார்னியா மற்றும் உறவினர்கள், உயிரிழந்த சுதாகரின் உடலை தங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், அவர் உயிரிழந்து 7 நாட்கள் ஆகியும், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாததால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :