முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி

Home

shadow

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் ஆகியோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜீவ் காந்தி ஏற்றார். பின்னர் இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மே 21-ஆம் நாள் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீ பெரம்பத்தூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவர் இந்தியா உள்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நிகழ்து இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று ராஜீவ் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இது தொடர்பான செய்திகள் :