முரண்வாதிகளின் 3 போலி பிரசாரங்கள் ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது - அருண் ஜேட்லி

Home

shadow

முரண்வாதிகளின்  3 போலி பிரசாரங்கள் ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சம்ஜெளதா விரைவு ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை இந்து பயங்கரவாதம் என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி விமர்சித்து வந்ததாகவும், அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களை விடுவித்து புதன்கிழமை தீர்ப்பளித்ததன் மூலம் முரண்வாதிகளின் போலி பிரசாரம் அம்பலமானது என தெரிவித்துள்ளார். இதேப்போல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவ வழக்கை விசாரித்த ஆமதாபாத் நகரில் உள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சிறப்பு நீதிமன்றம், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாகவும்பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு கடந்த ஆண்டு லண்டனுக்குத் தப்பிச் சென்று, அங்கு சுதந்திரமாக இருந்த தொழிலதிபர் நீரவ் மோடி பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இப்படியாக, முரண்வாதிகளின் மூன்று போலி பிரசாரங்கள், ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி உள்ளதாகவும், இதில் இருந்து, போலி பிரசாரங்கள் செய்வோர் பாடம் கற்றுக் கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பான செய்திகள் :