மூளைக் காய்ச்சலால் 36 குழந்தைகள் பலி பீகாரில் தொடரும் சோகம்

Home

shadow                    பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் என்செபாலிடிஸ் எனும் மூளைக் காய்ச்சால் நோயால் உயிரிழந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூளையின் செயல்பாட்டைத் தாக்கி, குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்டவை ஏற்படுத்தும் ஒரு வித காய்ச்சலுக்கு என்செபாலிடிஸ் Acute Encephalitis Syndrome (AES) என்று பெயர்.
இந்த நோயின் தாக்கம் காரணமாக  பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில்  தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 133 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குழந்தைகளை வெறும் வயிற்றோடு இரவில் தூங்கவோ அல்லது லிட்சி உள்ளிடவற்றை சாப்பிடவோ அனுமதிக்க வேண்டாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :