மேட்டூர் - அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Home

shadow


         மேட்டூர் அணைக்கு நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 79 புள்ளி 3 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 77 புள்ளி மூன்று ஒன்று அடியாக இருந்தது.

இது தொடர்பான செய்திகள் :