ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கு - ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Home

shadow

           ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கு - ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

         தமிழகத்தில் ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. 

       மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த 8ம் தேதி பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது என்றும், ஊழியர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

       தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள், தமிழ் மொழி தெரியாதவர்களாக உள்ளனர் என்றும், குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை என்றும் கூறியிருந்தார்.

       எனவே தமிழகத்தில், ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்த தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இது தொடர்பான செய்திகள் :