ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Home

shadow

                                                                                                        இலங்கை வசம் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இலங்கை சிறையில் உள்ள  2 மாணவர்கள் உட்பட 19 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்,  இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 165 விசைப்படகுகளில் வெறும் 37 படகுகள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மீட்கப்பட முடியாத எஞ்சிய படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட  5 படகுகளை மீட்க வேண்டும், இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட  புதிய சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம்  பேருந்துநிலையம் அருகே  மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :