விழுப்புரம் - வாரச்சந்தை துணிப் பைகளுக்கு வரவேற்பு

Home

shadow


        செஞ்சியில் இன்று நடைபெறும் வாரச்சந்தையில், பொங்கல் பண்டிகைக்கான பானைகள், மாடுகளை அலங்காரம் செய்யும் பொருட்கள், துணிப்பைகள் இடம்பெற்றுள்ளன.

செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை என்பதால் இன்று சிறப்பு வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த சந்தையில் கிடைக்கிறது. தைப் பொங்கல் முதல் நாள்  பொங்கல் வைப்பதற்காக மண் பானைகளும், அலங்கரிக்கப்பட்ட மண்பானைகளும் விற்கப்படுகிறது. மாட்டு பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க மணிகளும், கழுத்துப்பட்டைகளும், மாடுகளுக்கான கயிறுகள், சலங்கை அலங்கார பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. சலங்கையின் விலை 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கப்படுகின்றன. மேலும் தற்போது பாலிதீன் பை தடை விதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து கடைக்காரர்களும் துணிப்பையை உபயோகிக்கின்றனர். இதனால் துணிப்பை விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் துணிப்பைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :