ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Home

shadow

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போராட்டம் நடந்து இன்றோடு ஒரு வருடம் முடிகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி புனித தோமையார் ஆலயத்தின் முன்பு அப்பகுதி மக்கள் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு  மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.  

இது தொடர்பான செய்திகள் :