ஸ்டெர்லைட் வழக்கு - நீதிபதி சசிதரன் விலகல்

Home

shadow

            தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.

          தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.  இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

          இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

        இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார். ஸ்டெர்லைட் வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால் தற்போது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

       வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :