ஹரியாணா – பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி

Home

shadow


        பத்திரிகையாளர் கொலை வழக்கில், மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறி உள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில்தேரா சச்சா சௌதாஎன்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு ஹரியாணா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை வழக்கு ஹரியாணா சிபிஐ நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த வழக்கில்  குர்மீத் ராம் ரகீம் சிங்கைநீதிமன்றம் - குற்றவாளி என தீர்ப்பு கூறி உள்ளது. தண்டனை விவரம் வருகிற 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளஅளது. தேராவில் 15 வருடங்களுக்கு முன்னர் பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக ஆசிரமங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி எழுதியதால் பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :