எமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Home

shadow

                             எமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் "எமிசாட்' உள்பட 29 செயற்கைக்கோள்களைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று காலை 9.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்காக உருவாக்கப்பட்ட எமிசாட் செயற்கைகோள், ராணுவத்திற்காக உளவு பார்க்கும் பணியில் ஈடுபட உள்ளது. இதனை தவிர்த்து, அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும்,  லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் இஸ்ரோ செலுத்தும் இரண்டாவது ராக்கெட் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :