இயற்பியலுக்கான நோபல் பரிசு

Home

shadow

2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர்

இதனை வெளியிட்டனர். இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின்ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது. 118 ஆண்டு கால நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லேண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 55 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசு பெறும் பெண்மணி என்ற பெருமையும் டோனாவுக்கு கிடைத்துள்ளது. #ArthurAshkin #GerardMourou #DonnaStrickland

இது தொடர்பான செய்திகள் :