ட்விட்டரில் ஆன்லைனில் இருக்கும் பயனர்கள் குறித்து அறிய புதிய வசதி அறிமுகம்

Home

shadow

 ட்விட்டரில் ஆன்லைனில் இருக்கும் பயனர்கள் குறித்து அறிய புதிய வசதி அறிமுகம்

ட்விட்டரில் ஆன்லைனில் இருக்கும் பயனர்கள் குறித்து அறிய புதுவசதி வரவுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பயன்பாட்டில் இருப்பது பேஸ்புக். இதேபோல் பிரபலங்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வலைத்தளமாக  ட்விட்டர் விளங்குகிறது. பேஸ்புக்கில் இருப்பது போன்று பிறருடன் சாட் செய்யும் வசதி ட்விட்டரிலும் இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் பயனர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள புதுவசதியை ட்விட்டர் அறிமுகம் செய்யவுள்ளது. இதுதொடர்பாக  ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.இந்த வசதி ஆன்லைனில் இருப்பவருடன், எளிதில் தொடர்பு கொள்ள உதவும்.

இது தொடர்பான செய்திகள் :