வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2

Home

shadow

                   வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2

                 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஆய்வு மையத்தில் இருந்து, சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை, சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது.

அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட, தொழில் நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுண்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது.

இன்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2’ வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது.

இது தொடர்பான செய்திகள் :