ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு 5 கோடி ரூபாய் அபராதம்

Home

shadow

 

ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


ஃபேஸ்புக்  நிறுவனம் 2007 முதல் 2017 ஆண்டு வரை வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், ஃபேஸ்புக் நிறுவனத்தில்  பல்வேறு செயல்களின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களானது பயனாளர்களின் அனுமதியின்றி, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தபட்டுள்ளதால்  பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து ஃபேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது எனவும், அதனால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :