அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரம் நவீன ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் - பாதுகாப்பு அமைச்சகம்

Home

shadow

                   அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரம்  நவீன ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


மேற்கு
வங்கத்தின் இஷாபூர் நகரிலுள்ள அரசுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ரகத் துப்பாக்கிகள், களப் பரிசோதனையில் சரியான முறையில் இயங்காததால் அந்தத் துப்பாக்கிகளை ராணுவம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்காக இந்தியா ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது. உடனடி கொள்முதல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், 72 ஆயிரத்து 400 நவீன ரகத் துப்பாக்கிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும்  700 கோடி ரூபாய் செலவில் இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிகள் ஒரு ஆண்டுக்குள் பெறப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :