ஆக்சிஜனை வெளிப்படுத்தும் இயந்திரம்

Home

shadow

         ஆக்சிஜனை வெளிப்படுத்தும்  இயந்திரம்

        தமிழகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் சவுந்தரராஜன் குமாரசாமி,  கோவை மாவட்டத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தண்ணீரில் செயல்படக்கூடிய சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் இயந்திரம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் என  அவர் கூறியுள்ளார்.


       இத்தகைய இயந்திரத்தை உருவாக்க சுமார் 10 ஆண்டுகள் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதே போல் இது போன்ற இயந்திரங்கள் உலகில் வேறு எங்கும் இல்லை எனவும், மேலும் இந்த இயந்திரம் , சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது எனவும் , இந்தியாவில் வெகு விரைவில் அறிமுகமாகும் என தான் நம்புவதாக பொறியாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது போன்ற இயந்திரங்களை இந்தியாவில் பயன்படுத்தினால் சுற்றுச்சுழல் மாசுப்பாடு குறையும் , பசுமையான வாழ்வை அனைவரும் வாழலாம் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இது போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் பொறியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :