ஆதார் இணைப்பு அவகாசம் நீட்டிப்பு

Home

shadow


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது

குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு என அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வருமான வரி தாக்கலின் போதும் ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டது. முன்னதாக பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் 2017 ஜூலை 31 வரை வழங்கப்பட்டது. பின்னர் இதற்கான கால அவகாசம் அடுத்தடுத்து நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடைசியாக வழங்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு 5வது முறையாக நீட்டித்துள்ளது. அதன்படி அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :