ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது - தனித்துவ அடையாள ஆணையம்

Home

shadow

ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய தனித்துவ  அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

 

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள பலரின் ஸ்மார்ட்போன்களில் ஆதார் உதவி எண் எனும் பெயரில் ஒரு எண் தானாக பதிவாகி இருந்தது. செயல்பாட்டில் இல்லாத அந்த எண் ஆதார் உதவி மையத்தின் பழைய எண் என தெரிய வந்தது. ஆதார் எண் தானாக மொபைல்களில் பதிவான விவகாரத்திற்கு பின்னணியில் கூகிள் நிறுவனம் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அந்நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக உதவி எண் தானாக பதிவானதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூகிள் நிறுவனம் தெரிவித்தது. இதனிடையே, ஆதார் தகவல்கள் திருடப்பட்டு விட்டதாக  தகவல் பரவியது. இதனால் பலர் பீதியடைந்தனர். இந்நிலையில், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், விஷமிகள் பரப்பும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என இந்திய தனித்துவ  அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :