இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கை கோள்களை பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் மூலம் இந்தியாவின் இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்தவுள்ளது

Home

shadow

                                இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கை கோள்களை, பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் மூலம் இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு, நாளை விண்ணில் செலுத்தவுள்ளது. 


இதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.


ரு காலத்தில், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளின் ராக்கெட் மூலம் விண்ணில் செயற்கைக் கோள்களை ஏவி பரிசோதித்த இந்தியா, இன்று வளர்ந்த நாடுகளின் செயற்கைக் கோள்களையே வர்த்தக ரீதியில் விண்ணில் செலுத்தும் திறன் படைத்ததாக வளர்ச்சி அடைந்துள்ளது. 


அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் நோவா எஸ்.ஏ.ஆர். மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக் கோள்களை, இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, வணிக நோக்கில் விண்ணில் ஏவ உள்ளது. இதில் 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ்.ஏ.ஆர். என்ற செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்காகவும், 444 கிலோ எடை கொண்ட எஸ்1 - 4 என்ற மற்றொரு செயற்கைக் கோள் பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காகவும் ஏவப்படுகின்றன. 


இந்த 2 செயற்கைக் கோள்களும், பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலமாக நாளை இரவு 10:07 மணிக்கு. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 


இதற்கான கவுண்ட் டவுன், இன்று பிற்பகல் 1.07 மணிக்கு தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இது தொடர்பான செய்திகள் :