இணையத்தில் உலா வரும் போலி செயலிகளால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது - இணைய பாதுகாப்பு நிறுவனம்

Home

shadow

                  முன்னனி வங்கிகளின் பெயரில் இணையத்தில் உலா வரும் செயலிகளால் ஆயிரகணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று  தெரிவித்துள்ளது.

சோபோஸ் லேப்ஸ் எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளின் பெயரில் போலி செயலிகள் உலா வருவதாகவும், வங்கிகளின் உண்மையான லோகோ மற்றும் பிற தகவல்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளதால், போலி செயலிக்கும் உண்மையான செயலிக்கும் இடையேயான வித்தியாசத்தை வாடிக்கையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது. கேஷ் பேக், அட்டகாச பரிசு போன்ற போலி வாக்குறுதிகளை அளித்து வாடிக்கையாளர்களை இந்த செயலிகளை தரவிறக்கம் செய்ய வைத்து, அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :