இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா

Home

shadow

 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் லக்னோவில் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.


மாணவர்களிடையே அறிவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா,  அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின், உயிரி தொழில்நுட்பத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த விழா நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசின் புவி அறிவியல் துறை செயலாளர்  எம்.ராஜீவன் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் சாதனைகளை கொண்டாடும் வகையில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான  மாபெரும் களமாக விளங்கி வருவதாகவும் ராஜீவன் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் துறையை நோக்கி பயணிக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் கருவியாகவும், அறிவியலை முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதற்கும் இந்த திருவிழா பெரிதும் பயன்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பான செய்திகள் :