இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமிப்பு

Home

shadow

 

வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது.


சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்-அப்செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள். இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த புதிய தலைவர் நியமனம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :