இந்திய விமான படைக்கு மிக் 29 ரக போர் விமானங்களை உடனடியாக கொள்முதல் செய்ய ரஷ்ய அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

Home

shadow

                 இந்திய விமான படைக்கு மிக் 29 ரக போர் விமானங்களை உடனடியாக கொள்முதல் செய்வது தொடர்பாக ரஷ்ய அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


1980-ஆம் ஆண்டில் இருந்து இந்திய விமான படையில் மிக் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான படையில், போர் விமானங்களின் தட்டுப்பாட்டை போக்கவும், விமான படையின் திறனை அதிகரிக்கும் வகையிலும், புதிதாக 21 மிக் 29 ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு விமானத்திற்கு 285 கோடி ரூபாய் என்ற வீதம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இதனை இந்தியா வாங்க உள்ளது. ரஃபேல் விமானங்களை விட இவை விலை குறைந்தது என்றாலும், பழைய ரகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடதக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :