இந்தியா   கிரிக்கெட்  

Home

shadow

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடியது.  இதில் மிதாலி ராஜ் தலைமையிலான அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது.  இதில், நேற்று நடைபெற்ற 5வது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிதாலி ராஜ் 62 ரன்கள், மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள் எடுத்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி166 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதன் மூலம் இந்திய 3-1 என்ற  புள்ளிக் கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.  தென்னாப்பிரிக்க நாட்டில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 சர்வதேச போட்டி என 2 நிலைகளிலும் விளையாடி வெற்றி பெற்ற முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையையும் இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது.

இதனிடையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.  நேற்று 3வது டி20 கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது.  இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இது தொடர்பான செய்திகள் :