இந்தியாவில் இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 வரும் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது

Home

shadow

                         இந்தியாவில் இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 செயற்கைக் கோள் வரும் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க செய்வதற்காக ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோளை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கடந்த மே மாதமே இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜி சாட்-11 செயற்கைக்கோள் தயாரிப்பு பணி முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த செயற்கைக்கோள் 5854 கிலோ எடையில் மிக, மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஜி சாட்-11 செயற்கைக் கோளை பிரெஞ்சு கயனாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை மறுநாள் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்த உள்ளனர். ஏரைன்-5 ராக்கெட் மூலம் ஜி சாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஜி சாட்-11 செயற்கை கோளில் 40 அதிநவீன டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் இணையத்தள வேகம் கூடுதலாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இது தொடர்பான செய்திகள் :