இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இன்று அதிகாலை வெற்றிகரமாக தரையிறங்கியது

Home

shadow

 

செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இன்று அதிகாலை வெற்றிகரமாக தரையிறங்கியது.


பூமிக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் அமைப்பது தொடர்பாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்சைட் எனும் விண்கலத்தை நாசா கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தியது சுமார் 7 மாத கால பயணத்திற்கு பின்னர் இன்று அதிகாலை 1:30 மணி அளவில் இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதை அடுத்து நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்தனர். செவ்வாய் கிரகத்தின் உள்பகுதிகள் குறித்தும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்தும் இன்சைட் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :