இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள்

Home

shadow

                ஜிசாட்-7 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப் 11 ராக்கெட் இன்று  விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.10 மணியளவில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைப் பொருத்தவரை இதுவரை 12 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. இதில் 7 வெற்றிபெற்றன. 3 ராக்கெட்டுகள் தோல்வியிலும், இரண்டு பகுதி தோல்வியிலும் முடிந்தன. இப்போது அனுப்பப்படுவது 13 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டாகும். இந்த ராக்கெட் மூலம் முழுவதும் உள்நாட்டில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்தி 250 கிலோ எடைகொண்ட ஜிசாட்-7 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. விமானப்படையின் தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் அனுப்பும் திட்டத்துக்கான 26 மணி நேர கவுன்-டவுன் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

இது தொடர்பான செய்திகள் :