இஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது

Home

shadow

        இஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று  மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோ உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று  மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து பேசிய இஸ்ரோ விஞ்ஞானிகள், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும் என்றும் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்துள்ள 33-வது செயற்கைகோளான ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட் என தெரிவித்த அவர்கள்., இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி, 8 நிமிட நேர கவுண்ட் டவுன் நேற்று பகல் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது என குறிப்பிட்டனர். மேலும், ‘கஜாபுயல் திசை மாறியதால் ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராக்கெட்டும், ஏவுதளமும் அனைத்துவிதமான காலநிலையை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டதால் புயல் பற்றி கவலைப்படவில்லை எனவும் கூறினர்.

இது தொடர்பான செய்திகள் :