இஸ்ரோ தலைவர் சிவன்

Home

shadow


       ஜி.சாட்-6 செயற்கைகோளுடனான தகவல் தொடர்பு இணைப்பை பெற தொடர் முயற்சி நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் கடற்படைக்கு சொந்தமான இடத்தில் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மைய அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில்  இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்த செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் தென் பகுதியில் முதல் முறையாக அமைக்கப்பட உள்ளது என்றார். அண்மையில் ஜி.எஸ்.எல்.வி. எப்.08 - ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோளான ஜி.சாட்-6 செயற்கை கோள், டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனுடனான தகவல் தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய இஸ்ரோ தலைவர் சிவன்பாமர மீனவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.


இது தொடர்பான செய்திகள் :