உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா நான்காம் இடம்

Home

shadow

               உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவை வீழ்த்தி இந்தியா நான்காம் இடத்தை பெற போவதாக இஸ்ரோ விஞ்ஞானி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியில்பள்ளி மாணவர்களிடையே விண்வெளி பயணம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு சிறு வயது முதலே மாதிரி செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தொழில் நுட்பம் குறித்த விளக்கத்தை கற்று கொடுக்கும் வகையில் ராக்கெட் ஏவும் நேரடி செயல் விளக்கத்தை இஸ்ரோ விஞ்ஞானியான விஸ்வநாதன்துவக்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது உலக அளவில் விண் வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஐந்தாம் இடம் உள்ளதாகவும் கூடிய விரைவில் சீனாவை வீழ்த்தி நான்காவது இடத்திற்கு வரப்போவதாகவும், ஐஎஸ்ஆர் வுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசுகொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :