உலகின் மின்விசை கார்களின் உற்பத்தியில் தன்னிகரற்ற இடத்தில் உள்ளது நார்வே

Home

shadow

ஒஸ்லோவின் ஒரு வீதியில்,உலகின் பெரிய பப்ளிக் கேரேஜில் வரிசையாக டெஸ்லாஸ், நிசான் லீப்ஸ்,BMW i3s போன்ற டாப் மின்விசை கார்கள் காணப்படுகிறது

உலகின் மின்சார கார்கள், அதாவது மின்விசை கார்களின் உற்பத்தியில் தன்னிகரற்ற இடத்தில் உள்ளது நார்வே. இந்த ஆண்டு,மூன்றில் ஒரு பங்கு முழுதும் மின்விசை கார்கள் மற்றும் கலப்பு மின்விசை கார்கள் விற்றுள்ளப்பட்டது என்றும் இந்த எண்ணிக்கை 40சதவிகிதம் அடுத்த வருடம் ஏறும் என்று கூறப்படுகிறது.

மாறி வரும் பூமியின் பருவ மாற்றத்தை சமாளிக்கும் விதமாக நோர்வே நாட்டின் இந்த மின்விசை வாகன உற்பத்தி, ஒரு பசுமை புரட்சியாக கருதப்படுகிறது.

நார்வே அரசு இந்த திட்டத்திற்கு முழு நிதியுதவி ஒதுக்கி,மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.ஆனாலும் இது எவ்வளவு  வருடங்கள் தொடரும் என்று தெரியாத நிலையில்,மக்கள் தரப்பில் இருந்து,இன்னும் அதிக மின்விசை மையங்கள் தேவை என்று கருதப்படுகிறது.

எந்த ஒரு மாற்றம் நிகழ்ந்தாலும்,மாற்றுக்கருத்து இல்லைஎன்றால் அது பொய்யாகிவிடும்.கருத்து வேற்றுமை இருந்தால் தான் பரிணாம வளர்ச்சி அடைய முடியும் எனபது உண்மையல்லவா?

இது தொடர்பான செய்திகள் :