எமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது

Home

shadow

                                    எமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட், நாளை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளங்களில் இருந்து, நாளை காலை 9.30 மணி அளவில், 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. எமிசாட் செயற்கைக்கோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் மொத்த எடை 436 கிலோவாகும். இதேபோல், 28 வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 3  வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளது. எமிசாட் தவிர்த்து மற்ற 28 செயற்கை கோள்களும், லுதியானா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவையாகும். ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பொது மக்கள் அருகில் இருந்து பார்க்க இது நாள் வரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் தனி அரங்கு ஒன்று ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மக்கள் கண்டு ரசிக்கலாம். சுமார் 5 ஆயிரம் அமரும் வகையில் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :