எலெக்ட்ரிக் கார்ளை பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்

Home

shadow

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் எலெக்ட்ரிக் கார்ளை பயன்படுத்த தமிழக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

வாகன புகையால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் எலெக்ட்ரிக் கார்ளை பயன்படுத்த  மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. குறைந்த மின்சாரத்தில் செயல்பட கூடிய  எல்.இ.டி பல்புகளை தயாரித்து வரும் மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. தவணை முறையில் பணம் செலுத்தி இந்த கார்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது இந்த நிறுவனத்திடம் இருந்து கார்களை வாங்க தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர், வீடுகளுக்கான 'ஸ்மார்ட்' மீட்டர், மற்றும் எலெக்ட்ரிக் கார் தொடர்பாக, எனர்ஜி எபிஷியன்சி அதிகாரிகளுடன், சமீபத்தில், மின்வாரிய உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த காரின் பயன்பாடு குறித்து, போக்குவரத்து ஆணையரகத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், சோதனை ரீதியாக, இரண்டு - மூன்று பேட்டரி கார்களை வாங்கி பயன்படுத்தவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே டெல்லி மற்றும் ஆந்திர மாநில அரசுகள் இந்த நிறுவனத்திடம் இருந்து கார்களை வாங்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :