ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் சக்தி வாய்ந்த பிரித்வி ஏவுகணை - வெற்றிகரமானது சோதனை

Home

shadow

 

வளிமண்டல பகுதிக்கு மேல் எதிரி நாட்டு ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் சக்தி வாய்ந்த இரண்டு அடுக்கு கொண்ட பிரித்வி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.


ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இரண்டு அடுக்குகள் கொண்டது. ரேடார் உதவியுடன் எதிரி நாட்டு ஏவுகணையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்ட கணினி உதவியுடன் ஏவுகணைக்கு தகவல் அனுப்பப்படும். தகவல் கிடைத்து விண்ணில் செலுத்துவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்ட உடன் ஏவுகணை செலுத்தும் அமைப்பில் இருந்து ஏவுகணை செலுத்தப்படும். வளிமண்டலத்தின் மேல் பகுதியை அடைந்ததும், ஏவுகணையின் வெப்பதடுப்பு அமைப்பு ஏவுகணையில் இருந்து பிரிந்து சென்று விடும். இதன் பின்னர் புற ஊதா கதிர் அமைப்பின் உதவியுடன் எதிரி ஏவுகணையை தாக்கி அழிக்கும். ஏவுகணையின் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.

இது தொடர்பான செய்திகள் :