ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லும் திறன் கொண்ட அதிநவீன ரோந்து கப்பல்

Home

shadow

       விஜயா என்ற அதிநவீன ரோந்து கப்பலை பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ரா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் உள்ள காட்டுப்பள்ளியில் எல்.அன்ட்.டி கப்பல் கட்டும் தளத்தில்
185 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல், 98 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலம் கொண்டது. விஜயா என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன ரோந்து கப்பலை பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ரா நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


இந்த கப்பல், இந்திய கடலோர காவல்படையின் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. 

அதிகபட்சமாக மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். இந்த கப்பலில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, அதிநவீன துப்பாக்கிகள், கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

11 உயர் அதிகாரிகள் உட்பட 102 பேர் கப்பலில் இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும்

இது தொடர்பான செய்திகள் :